ஆ.... ஆ... என்ன? இது?.......


ந்தியாவில் இருந்து உலகம் முழுவதும் பரவிவிட்ட யோகா, அந்தந்த நாட்டு மக்களின் விருப்பத்திற்கேற்ப சில மாற்றங்களை சந்தித்து வருகிறது. பாம்பு யோகா, பல்லி யோகா, பாலியல் யோகா என்றெல்லாம் அதற்கு புதுமையாக பெயர்களையும் சூட்டிக் கொள்கிறார்கள். அந்த வரிசையில் தற்போது அமெரிக்காவில் வேகமாக பரவி புகழ்பெற்று வருவது `டாகா’ எனும் யோகா!
செல்லப் பிராணியாக வளர்க்கப்படும் நாய்களை மனிதர்களுடன் சேர்த்து `டாகா’ எனும் `டாக் யோகா’ கற்றுத்தரப்படுகிறது. வழக்கமாக உடலை வளைத்து செய்யும் `யோகப் பயிற்சிகளுடன் நாய்களையும் சேர்த்துக் கொள்வது ஆத்ம தொடர்பை விரைவுபடுத்தும்’ என்று பயிற்சி தருபவர்கள் விளக்கம் அளிக்கிறார்கள்.
போர்ட்லண்ட் நகரில் 60 வயதான ஜூலி லாரன்ஸ் `டாக் யோகா’ பயிற்சி அளிக்கிறார். அவர் சொல்கிறார்:
“யோகா 2 ஆயிரத்து 500 ஆண்டு காலமாக செய்யப்பட்டு வருகிறது. அதனால் அது பழமையான கலையாக இருந்து வருகிறது. எல்லா விலங்குகளும் மற்ற உயிரினங்களுடன் ஒரு இணக்கத்துடன் தான் வாழ்ந்து வருகின்றன. மனிதனுக்கும் மற்ற விலங்குகளோடு இணக்கம் உண்டு. செல்லப்பிராணியாக வளர்க்கும் நாய், நம்மைப் புரிந்துகொண்டு நம்மோடு இணக்கமாகப் பழகுகிறது. யோகக் கலை என்பது இணக்கமாக வாழும் முறையை கற்றுத் தருவதாகும். எனவே நாயையும் இணைத்து செய்யப்படும் யோகக் கலை இணக்கமான ஆத்ம வாழ்வுக்கு சிறந்த வழியாகும். அதை பின்பற்றுவதுதான் உண்மையான யோகியின் கொள்கையுமாகும். நாங்கள் கற்றுத் தரும் டாக் யோகா பயிற்சி மனிதனுக்கும், மற்ற உயிரினங்களுக்கும் உள்ள ஆத்ம தொடர்பை அதிகரிக்கிறது”- என்கிறார்.
நாயுடன் (டாக்) இணைத்து செய்யப்படும் யோகா என்பதால் இதனை (டாக்+ யோகா) `டாகா’ என்று குறிப்பிடுகிறார்கள்.
யோகா பயிற்சி செய்பவர்கள் முதலில் சூரிய நமஸ்காரம் செய்வார்கள். டாகா முறையில் சூரிய நமஸ்காரம் செலுத்துவதற்கு, பயிற்சியாளர் தளர்வாக நின்று கொள்கிறார். பிறகு கைகளால், நாயின் கால்கள் அதன் உடலுடன் இணையும் பகுதியில் பிடித்து தூக்கி உயரத்தில் நிறுத்து கிறார். அதாவது வழக்கமான சூரிய நமஸ்காரத் தில் புதிதாக நாயை சேர்த்து தூக்கிக் கொள்கிறார்கள். இதுபோலவே தொடர்ந்து இதர யோகாசனங்களையும் நாயுடன் இணைந்து செய்கிறார்கள்.
இந்த பயிற்சி மையங்கள் அமெரிக்காவில் நிறைய திறக்கப்படுகின்றன. சீனாவைச் சேர்ந்த பெண் களும் பயிற்சி அளிக்கிறார்கள். செல்லப் பிராணிகளின் பிரியர்களான பெண்களும், சிறுவர் களும் நாய்களுடன் சென்று குதூகலமாக இந்த `டாகா’வை கற்கிறார்கள்.
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

Leave a comment