இந்தோனேசியாவின் Sangatta, East Kutai பிரதேசத்தில் வசிக்கும் 40 வயதுடைய இளங்குழந்தைப் பள்ளி ஆசிரியையான NOORSYAIDAH என்பவரின் உடம்பில் தான் அதிசயமான முறையில் 10 – 20 Cm நீளமான இரும்புக்கம்பிகள் கடந்த 18 ஆண்டுகளாக வளர்ந்துள்ளது. நெஞ்சு மற்றும் வயிற்றுப்பகுதிகளில் வளர்ந்துள்ள இக்கம்பிகள் கடந்த 1991ல் தான் முதன் முதலில் இவரது உடம்பில் அவதானிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். ஒரு சமயம் இவர் உடம்பிலிருந்து கம்பி வீழ்வதை கண்டுள்ளார். அதிலிருந்து ஒரு மாதம் கழித்து மீண்டும் அக்கம்பிகள் வளர்ந்துள்ளது. வளர்ந்த கம்பிகள் விழாமல் தொடர்ந்து வளர்வதை அவதானித்துள்ளார். இது சம்பந்தமாக மேற்கொள்ளப்பட்ட வைத்திய பரிசோதனையின் போது உடம்புக்கு வெளியே வளரும் அதே போன்ற கம்பிகள் உடம்பினுள்ளும் வளர்வது அவதானிக்கப்பட்டுள்ளது. இவ்வரிய நிகழ்வு பற்றி இந்தோனேசிய சுகாதார அமைச்சும், வைத்திய நிபுணர்களும் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். இது பற்றி அவரது சகோதரி கூறுகையில், அவரது உடம்பில் வளர்ந்த கம்பிகளை வெட்டி அகற்றுவதற்கு அவர் முயற்சித்த போது, அது உடம்பின் வேறொரு பாகத்தில் மீண்டும் வளர்வதை அவதானிக்க முடிந்ததாக குறிப்பிட்டுள்ளார். நான்கு பேர் அடங்கிய வைத்திய நிபுணர் குழுவொன்று இவரது உடம்பை படம் பிடித்து பார்த்த போது அவரது அடி வயிற்றுப்பகுதியில் 40 க்கும் அதிகமான கம்பிகள் காணப்பட்டுள்ளது.
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

One Response to this post

  1. indianist on October 12, 2012 at 1:42 AM

    உங்கள் ப்ளாக் மிகும் நன்றாக இருந்தது வித்தியாசமான செய்திகளை நீங்கள் எங்களுடன் பகிர்ந்துகொண்டதுக்கு நன்றி

    இப்படிக்கு

    புதிய தலைமுறை டிவி

Leave a comment