வித்தியாசமான பைக்


தேவையே கண்டுபிடிப்புக்களின் தாய்… என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி இருக்கிறது. இந்த பழமொழிதான் விஞ்ஞான உலகை இயக்கிக்கொண்டிருக்கிற ஒரு உந்து சக்தி என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. நித்தம் ஒரு கண்டுபிடிப்பு, நித்தம் ஒரு கருவி அல்லது எந்திரம் என்று விஞ்ஞானம் தன் பணியை தொடர்ந்து வருவதற்கு இந்த சக்தி தான் காரணமாக உள்ளது.
வாகன பெருக்கம், விரிவுபடுத்தவோ மாற்றியமைக்கவோ முடியாத குறுகிப்போன சாலைகளால் திணறாத நகரங்களே உலகில் இல்லை.
இதில் சீனாவும் விதிவிலக்கல்ல. சீனாவின் ஷாங்காய் நகருக்கு சென்றிருந்த பெஞ்மின் குலாக் என்னும் 17 வயது அமெரிக்க சிறுவனுக்கு வித்தியாசமான ஒரு `ஐடியா’ உதித்தது.
நெருக்கடி மிகுந்த சாலைகளில் பயன்படுவது போல் ஒரு சிறிய இருசக்கர வாகனத்தை கண்டு பிடித்தால் என்ன என்பது தான் அது.
அந்த எண்ணத்தின் வடிவம் தான் இந்த இளைஞன் வடிவமைத்துள்ள பாட்டரியில் இயங்கும் `யுனோ’ என்னும் பைக். யூ 3 ஸ்டிரிட் பைக் என்றொரு செல்லப்பெயரும் இதற்கு உண்டு. மித வேகத்தில் ஒரு சைக்கிளைப்போலவும், அதிக வேகத்தில் ஒரு மோட்டார் சைக்கிளை போலவும் ஓடுகிறது. இது சுற்றுசூழலுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத வாகனம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதிலென்ன ஆச்சரியம்? இது போன்ற பைக்
குகள் தான் ஏற்கனவே சந்தைக்கு வந்துவிட்டதே என்கிறீர்களா? இந்த பைக்கின் விஷயமே வேறு. இந்த பைக்கில் குறைந்த இடைவெளியில் இரண்டு பின் சக்கரங்களும் ஒரு முன் சக்கரமும் அமைக்கப்பட்டுள்ளது. ஓடாத போது மடங்கி பின் புற சக்கரங்களுடன் ஐக்கியமாகி இருக்கிறது முன் சக்கரம். துவக்கத்தில் இணையான பின்புற சக்கரங்களை மட்டுமேபயன்படுத்தி ஒரு சைக்கிளை போல் ஓடும். வேகமெடுத்தவுடன் ஒரு பட்டனைத்தட்டினால் முன்புற சக்கரங்கள் விமானத்தின் சக்கரங்களைப்போல் முன்னோக்கி வெளியே வந்து தரையில் பதிந்து ஓடுகிறது. நெருக்கடியான இடங்கள்; அவ்வளவு ஏன்? கட்டிடங்களுக்குள்ளே எடுத்து செல்லலாம். வீடு பலமாடி கட்டிடத்தில் இருந்தால் இந்த பைக்கை லிப்டுக்குள் அடக்கி சுலபமாக எடுத்து செல்லலாம்.
ஒருமுறை சார்ஜ் செய்தால் 48 முதல் 56 கிலோமீட்டர் தூரம் வரை செல்கிறது இந்த பைக். அதிக பட்சமாக மணிக்கு 48 கிலோமீட்டர் இதன் வேகமாகும். இதை வடிவமைக்க பெஞ்சமின் பயன்படுத்தியவை எவை தெரியுமா?
ஒரு ஜாய்ராஸ்கோப், ஒரு வீல் சேர் மோட்டார் மற்றும் அதற்கான பாட்டரிகள். தேவையான பிற கருவிகளையும் உபகரணங்களையும் தன் தாத்தாவிடம் இரவலாக வாங்கியதாக கூறுகிறார் இந்த எதிர்கால விஞ்ஞானி.
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

One Response to this post

  1. Unknown on December 26, 2017 at 4:10 AM

    Useful information I really like your blog posts... specially those on Latest Tamil News

Leave a comment