அதி நவீன தேடுதளம் ஹீலியாட்


உலகில் கூகுள் மட்டுமே கோலோச்சிக் கொண்டிருக்கும் தேடல் தளச் சந்தையில் புதிய, கூடுதல் வசதிகளுடன், மாறுபட்ட வகையில் முடிவுகளைத் தரும் தேடல் தளமாக அறிமுகமாகி யுள்ளது ஹீலியாட். தேடல் முடிவுகளைத் தருவதில், புதிய வழிகளை இது மேற்கொள் கிறது. நம் தேடல்களுக்கான முடிவுகளை அப்படியே பட்டியலிடாமல், அவற்றை வகைப் படுத்தி, ஒவ்வொரு வகைக்கும் ஒரு வண்ணத்திலான வட்டத்தைக் கொடுத்து, தகவல் களைக் காட்டுகிறது. இதனால், நாம் என்ன நோக்கத்திற்காக ஒரு சொல் கொண்டு தேடினாலும், அந்த நோக்கம் இங்கு ஏதேனும் ஒரு வகையாகக் காட்டப்படும். நமக்குத் தேவைப்படும் வண்ண வட்டத்தில் கிளிக் செய்தால், நம் தேவைகளுக்கான தளங்கள் மட்டும் பட்டியலிடப்படுகிறது.
சுருக்கமாகச் சொல்வதென்றால், உங்கள் தேடல்களை வகைப்படுத்திக் காணுங்கள் என்று நமக்கு ஹீலியாட் உதவுவதை உணரலாம். எடுத்துக்காட்டாக, Apple என்று தேடியபோது “Stock Quote”, “Products”, “News”, “iPhone”, “iTunes”, “iPad”… எனப் பலவகைகளில் தகவல்களைப் பட்டியல் இடுகிறது. இவற்றில் நமக்கு எது வேண்டுமோ, அதனை மட்டும் கிளிக் செய்து காணலாம். தளங்கள் அனைத்தையும் பெற்று, சில நொடிகளில் அவற்றை வகைப்படுத்தித் தருவதே இந்த தேடல் சாதனத்தின் சிறப்பம்சம். இந்தத் தேடல் தளத்தின் முகவரி  .http://www.helioid.com.இங்கே சொடுக்கவும்.
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

Leave a comment