“மருத்துவமனைத் தகவல்களை விட, மிக அதிகமான அளவில் இந்தப் பாதிப்பு காணப்படுகிறது. கபாபென்டினால் ஏற்படும் `அனார்கேஸ்மியா’ (உறவின்போது உச்சமகிழ்ச்சியை அடைய முடியாத நிலை), வயது முதிர்ந்தவர்களிடம் பரவலாகக் காணப்படலாம்” என்கிறார், மைக்கேல் டி. பெர்லோப். அமெரிக்கா பாஸ்டன் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி நரம்பியல் துறை உதவிப் பேராசிரியர் இவர்.
“எந்த அளவு கபாபென்டின் எடுத்துக்கொள்ளப்படுகிறதோ, அதற்கு ஏற்ப அனார்கேஸ்மியா பாதிப்பு ஏற்படுகிறது. கபாபென்டின் அளவு குறைக்கப்படும்போது, அல்லது நிறுத்தப்படும்போது சம்பந்தப்பட்டவர்களால் மீண்டும் உச்ச மகிழ்ச்சியை அனுபவிக்க முடிகிறது” என்று தெரிவிக்கிறார், பெர்லோப்.
குறைவான பக்க விளைவுகள், தூக்கக் கலக்க மந்தம், கிறுகிறுப்பு போன்றவற்றை விரைவாகக் குணப்படுத்தும் திறன் ஆகியவற்றால் பல ஆண்டுகளாக விரும்பப்படும் மாத்திரையாக `கபாபென்டின்’ உள்ளது.
தற்போது மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், கபாபென்டின் எடுத்துக்கொள்ளும் 50 வயதைத் தாண்டியவர்களில் 11 பேரில் மூவர், `அனார்கேஸ்மியா’ நிலைக்கு உள்ளாவது தெரியவந்திருக்கிறது.
ஆனால் அதேநேரம், இந்த மாத்திரை அறிமுகப்படுத்தப்பட்ட 1993-ம் ஆண்டில் இருந்து, சராசரியாக 38 வயதுள்ளவர்களில் 10 பேர்தான் `அனார்கேஸ்மியா’ பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர்.
“அனார்கேஸ்மியா பாதிப்புக்கு உள்ளான நோயாளிகளுக்கு, இது சரிசெய்யக்கூடியது, அதற்கேற்ப `டோஸ்’ அளவை மாற்றினால் போதும் என்ற தெம்பு அளிக்கப்பட வேண்டும்” என்று நம்பிக்கை ஊட்டுகிறார், பேராசிரியர் பெர்லோப்.
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

Leave a comment